Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

முஸ்லிம்களின் புனித நுாலை அவமதித்த நபர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

.

 

பாகிஸ்தானில் முஸ்லிம்களின் புனித நுாலான குரானை அவமதித்த சுற்றுலா பயணி கைதான நிலையில், பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை சுட்டுக் கொன்றதுடன், பொதுவெளியில் அவரை துாக்கிலிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் நகருக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றார். அங்கு அவர், முஸ்லிம்களின் புனித நுாலான குரானை அவமதித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, முகமது இஸ்மாயிலை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, அங்குள்ள மசூதியில், ஒலிபெருக்கி வாயிலாக இச்சம்பவம் குறித்து நடந்த விபரம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, முகமது இஸ்மாயிலை தங்களிடம் ஒப்படைக்குமாறு முழக்கமிட்டனர். பொலிசார் எச்சரிக்கை விடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து செல்லாததால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், எட்டு பேர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்தவர்கள் பொலிஸ் நிலையத்தை சூறையாடியதுடன், வாகனங்களையும் தீக்கிரையாக்கினர். இதனால், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என கருதி, பொலிஸார் ஓட்டம் பிடித்தனர்.

அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட முகமது இஸ்மாயிலை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுடன், அவரது உடலை வெளியே இழுத்துச் சென்று பொதுவெளியில் துாக்கிலிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியதை அடுத்து, பொலிஸார் குவிக்கப்பட்டனர்.