Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

முந்திரிக்காடு

இயக்குனர் களஞ்சியம். மற்றும் சீமான் நடிக்கும் படம்.

முந்திரிக்காடு - இது ஒரு சாதிப் பிரச்சனையை மையப்படுத்திய காதல் கதை.
இயக்குனர் களஞ்சியம். மற்றும் சீமான் நடிக்கும் படம். எனவே இது தோழர் தமிழரசன் கதையாக இருக்கும் என நினைத்தேன்ஆனால் இது ஒரு சாதிப் பிரச்சனையை மையப்படுத்திய காதல் கதை. ஆனாலும் முந்திரிக் காடுகளை காணும்போது தோழர் தமிழரசனை அங்கு சந்தித்த நினைவுகள் வந்தன. தோழர் தமிழரசனின் ஆதரவாளர் ஒருவர் விருத்தாச்சலம் சென்னை பஸ்ஸில் கண்டக்ராக பணிபுரிந்தார்.
அவர் ஒருநாள் தோழர் தமிழரசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என்னை விருதாச்சலத்திற்கு அழைத்துச் சென்றார். தனது பணி முடித்து வரும்வரை பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த தியேட்டரில் சிறிது நேரம் என்னை தங்க வைத்தார். அந்த தியேட்டரில் ரீல் மிசின் ஓட்டுனராக இருந்தவர் தோழர் தமிழரசனின் ஆதரவாளர். அப்போது அங்கு “மெல்ல திறந்த கதவு” படம் ஓடிக் கொண்டிருந்தது. நான் அவருடன் சேர்ந்து மிசின் ரூமுக்குள் இருந்து அந்த படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் அவர் என்னை அழைத்துச்சென்று ஜெயங்கொண்டத்தில் ஒரு தோழரிடம் ஒப்படைத்தார். அந்த தோழர் என்னை சயிக்கிளில் முந்திரிக்காடுகளினுடாக தோழர் தமிழரசனிடம் அழைத்துச் சென்றார். இந்த முந்திரிக்காடு பற்றி ஏற்கனவே தோழர் தமிழரசன் மற்றும் அவருடைய தோழர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் அன்றுதான் அதை நேரில் பார்த்தேன். உண்மையில் வழி தெரியாதவர்கள் சென்றால் திரும்பி வருவது கஸ்டம். ஆனால் இந்த காடுதான் தோழர் தமிழரசன் மரணத்திற்கும் காரணமாக இருக்கப் போகின்றது என்பது அப்போது எனக்கு புரியவில்லை.தோழர் தமிழரசன் பொன்பரப்பி வங்கியில் பணப் பறிப்பிற்கு சென்றபோது காரில் செல்லாமல் சயிக்கிளில் சென்றமைக்கு இந்த முந்திரிக்காடே காரணம். அருகில் முந்திரிக்காடு இருக்கிறது. அதனுள் சென்றுவிட்டால் அப்புறம் பொலிசார் யாரும் தம்மை பிடிக்க முடியாது என நினைத்தபடியால்தான் அவர்கள் சயிக்கிளில் சென்றனர்.