Breaking News
கிராமிய விளையாட்டு விழா – 2024
.
அஸ்பெக் மற்றும் விண்வெளி கலைமன்றம் என்பன கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவுடன் உகாஷா மொபைலின் ஆதரவுடன் இணைந்து நடாத்திய பாரம்பரிய விளையாட்டு விழா – 2024 போட்டி நிகழ்ச்சிகள் அஸ்பெக் அகடமி வளாகத்தில் 26.04.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இவ்விழாவில் சங்கீதக் கதிரை, குளம் கரை, பேணியும் பந்தும், சாக்கோட்டம்,பனிஸ் சாப்பிடுதல், தேசிக்கரண்டி சமநிலை ஓட்டம், முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், செங்காவடி, பலூன் உடைத்தல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் எச்.எம்.எம்.நியாஸ், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.திலீபா சிவரூபன், கவிஞர் சமூன் அன்சார், இஸ்மாயில் ஆகியோர் கலந்து சிறப்பித்து வெற்றியாளர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி வைத்தனர்.