Breaking News
பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு!
அவாமி லீக் கட்சிக்கு தோ்தலில் போட்டியிட தடை!
பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.
முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு இத்தோ்தல் நடத்தப்படுகிறது.
வன்முறை ஏதுமின்றி அமைதியாகத் தோ்தலை நடத்தி முடிக்க, முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமாா் 10 இலட்சம் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கடந்த 2024, ஒகஸ்டில் மாணவா் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். போராட்டங்களை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்தியதாக அவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு இத்தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.


