Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் சிறந்த முறைமை தயாரிக்கப்படும் - பிரதமர்.

அங்கவீனமுற்ற மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கும் நடவடிக்கை!

ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் சிறந்த முறைமை தயாரிக்கப்படும் - கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பிரதமர்  தெரிவிப்பு 

ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் சிறந்த முறைமையை தயாரிப்பதாக கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பிரதமரின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். விசேடமாக, வட மத்திய மாகாணத்திற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 6 அதிகாரிகளில் 5 பேர் மீண்டும் இடமாற்றம் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பணியமர்த்தலை மேற்கொள்ளும் போது அதிகாரிகள் பற்றிய மனிதாபிமான விடயங்களும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அதிகாரிகளை பணியமர்த்தும் போது சேவையின் தேவை குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார். 

ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் இதுவரை முறையான திட்டமொன்றோ பொறிமுறையொன்றோ இல்லை என்றும் தற்பொழுது அது தொடர்பில் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் கௌரவ பிரதமர் தெரிவித்தார். அத்துடன், ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் நிர்வாக சேவையில் பணியமர்த்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் மனிதாபிமான விடயங்களையும் கருத்திற்கொண்டு மிகவும் சிறந்த முறைமை ஒன்றை தயாரிப்பதாக கௌரவ பிரதமர் மேலும் தெரிவித்தார். 

அதற்கு மேலதிகமாக, அங்கவீனமுற்ற மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார். அத்துடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களின் முன்னேற்றம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட உப குழுக்களின் தலைவர்கள் இதன்போது விடயங்களை முன்வைத்தனர். 

இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.