2011 ம் ஆண்டு, காணாமல் ஆக்கப்பட்ட லலித். மற்றும் குகன் தொடர்பான வழக்கு இன்றைய தினம் -
வழக்கின் சாட்சி ஆன கோத்தாபாய ராஐபக்ஷவுக்கு Zoom ஊடக சாட்சி வழங்க அனுமதி
அச்சுவேலி பகுதியில் 2011 ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 9ம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட முன்னிலை செயற்பாட்டாளர்களான லலித். மற்றும் குகன் தொடர்பான வழக்கு இன்றைய தினம்(6) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் செல்வநாயகம் லெனின் குமார் முன்னிலையில் இடம் பெற்றது,
காணாமல் போன லலித் மற்றும் குகன் சார்பில் சட்டத்தரணி ரவிகார பின்னது மன்றில் ஆஜராகி விடயங்களை முன் வைத்திருந்தார்.
காணமல் போன வழக்கு இன்று (6) யாழ்ப்பாண நீதாவான் நீதிமன்றில் எடுக்க பட்டது. கடந்த வழக்கில் இந்த வழக்கின் சாட்சி ஆன கோத்தாபாய ராஐபக்ஷ சட்டத்தரணிகள் ஊடக கோரிக்கை விடப்பட்டது நீதிமன்றம் வராமல்
Zoom ஊடக சாட்சி வழங்க அனுமதி தரும்படி. அதற்கு உரிய காரணத்தை சத்திய கடதாசி மூலம் வழங்குமாறு நீதிமன்றம் கூறிய நிலையில்.
அதன் படி அந்த சத்திய கடதாசி இன்று(6) நீதிமன்றத்திற்கு வழங்க பட்டு இருந்தது.
வழக்கு மார்ச் மாதம் 6ம் திகதி தவணையிடப்பட்டுள்ளது. zoom ஊடக சாட்சி வழங்குவது தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலம் வழங்கும் படியும் அன்றைய தினம் மீண்டும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்க கட்டளை இடப்பட்டது


