Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திருகோணமலையில் காணி அபகரிப்பு, இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின்  காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திங்கட்கிழமை (02) மாலை 5.30 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடி முன்றலில்  சமூக செயற்பாட்டாளர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், 

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு. நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடு முழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின்  கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணான வகையில் தடுத்தல், ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கிறது.

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனக் கூறி, பெரும் பிரச்சாரம் செய்துவந்த ஜேவிபி அரசு முன்னைய ஆட்சியாளர்கள் செய்த சட்டவிரோதப் பணிகளையே இன்னும் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் உகந்தையில் புத்தர் சிலை நிறுவுதல் ஒரு இன மத விரோதச் செயலாகும்.

அத்துடன் நீண்ட நாட்களாக தொடரும் சமய வழிபாட்டுத்தலங்களின் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வினையும் தராமல் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது.     

கன்னியா சிவனாலய வழிபாட்டு முடக்கம், திருக்கோணேச்சர ஆலயத்தில் காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு, வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுக்குத் தடை, குருந்தூர் மலையில் தடையினை மீறிய புத்தவிகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை என பல நூறு சமயத் தலங்களின் பிரச்சினைகள் தொடர்பான பட்டியல் நீள்கிறது என்று குரல் எழுப்பினர்.

 

20250602_172624.jpg