Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழில் குறளிசை காவியம் பாகம் 02 வெளியீடு!

உலகம் போற்றும் இந்த சாதனையை புரிந்த லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி சகோதரர்கள்.!

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு நேற்றையதினம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

சகோதரர்களான இவர்கள் இருவரும் இணைந்து இசை அமைத்து திருக்குறளின் 1330 குறள்களையும், அவற்றின் பொருள்களையும் பாடல்களாக வழங்கியுள்ளனர். 

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், அதாவது லிடியன் நாதஸ்வரத்துக்கு 9 வயதும், அமிர்தவர்ஷினிக்கு 12 வயதும் இருக்கும்போது இந்த பணி ஆரம்பிக்கப்பட்டது. 

தற்போது 10 வருடங்கள் கடந்த பின்னர் அவர்களது படைப்பு வெளியிடப்பட்ட நிலையில் பலரும் அதற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடகர்கள் இதில் பாடியுள்ளனர். 

குறிப்பாக தேனிசை தென்றல் தேவா, உன்னிமேனன் உட்பட பலர் பாடியுள்ளதுடன் இலங்கையில் இருந்தும் 25இற்கு மேற்பட்ட பாடகர்கள் இதில் பாடியுள்ளனர்.

இதன் முதல் வெளியீடு தமிழகத்தில் இடம்பெற்ற நிலையில் இரண்டாவது வெளியீடு யாழில் இடம்பெற்றது. 

இந்த படைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான், வைகோ, திருமாவளவன் உட்பட பலர் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர்.

நேற்றைய பாகம் 02 வெளியீட்டின் முதல் இறுவட்டினை யாழ். இந்திய துணை தூதுவர் சிறீமான் சாய் முரளி வெளியிட்டார். 

அதனைத் தொடர்ந்து ஏனைய இறுவட்டுகளை தமிழ்த்துறை பேராசிரியர் சிவலிங்கராஜா, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ். தமிழ்ச்சங்க செயலாளர் லலீசன், பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.

லிடியன் நாதஸ்வரம் தனது கல்வியை தரம் 02 வரையிலும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி தனது கல்வியை தரம் 07 வரையிலும் கற்றிருந்த நிலையில் உலகம் போற்றும் இந்த சாதனையை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.