Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு!

தொல்லியல் திணைக்களத்தின் தலையீடுகள் மற்றும் கட்டண அறவீட்டுத் தடைகள் காரணமாக, கடந்த காலங்களில் சபையினால் இப்பகுதியைச் சீராகப் பராமரிக்க முடியாத சூழல்

யாழ்ப்பாணம் நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால்   துப்புரவு செய்யப்பட்டுள்ளது.  தொன்மை வாய்ந்த நிலாவரை கிணற்றுப் பிரதேசம் கழிவுகளாலும் பற்றைகளாலும் சூழப்பட்டிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை (ஜனவரி 7, 2026) விசேட தூய்மிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நிலாவரை பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் துப்புரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
உடைந்திருந்த பார்வையாளர் இருக்கைகள் மற்றும் நுழைவாயில் கதவுகள் திருத்தப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டன. பொலித்தீன் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டு, சுத்தத்தைப் பேணுவதற்கான அறிவுறுத்தல் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக பிரதேச சபையின் பராமரிப்பில் இருந்த இப்பகுதியில், 2021-2023 காலப்பகுதியில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தடுத்த தவிசாளர் நிரோஷ் மீது நீதிமன்றில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
தொல்லியல் திணைக்களத்தின் தலையீடுகள் மற்றும் கட்டண அறவீட்டுத் தடைகள் காரணமாக, கடந்த காலங்களில் சபையினால் இப்பகுதியைச் சீராகப் பராமரிக்க முடியாத சூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்பகுதி மக்கள் முகம் சுளிக்காத வகையில் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் மீண்டும் ஒரு சுற்றுலாத் தளமாகப் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.