Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

குமண காட்டுக்குள் 'மிட்நைட்' வேட்டை!

கடல் வழியாக இறைச்சி கடத்திய கும்பல் கூண்டோடு சிக்கியது!

குமண காட்டுக்குள் 'மிட்நைட்' வேட்டை கடல் வழியாக இறைச்சி கடத்திய கும்பல் கூண்டோடு சிக்கியது!
அமைதிக்கு பெயர் போன குமண தேசிய பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கி முழக்கங்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரு பெரிய கும்பலை விசேட அதிரடிப்படையினர் (STF) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்!

சினிமா பாணியில் கடல் வழி கடத்தல்!
​தரை வழியாகச் சென்றால் பொலிஸாரிடம் சிக்கிக் கொள்வோம் என நினைத்த இந்த "நவீன வேட்டைக்காரர்கள்", ஒரு படி மேலே போய் கடல் வழியை தேர்வு செய்துள்ளனர். 25 குதிரைத்திறன் கொண்ட அதிவேக படகில் (Fiber Boat) இறைச்சிகளை ஏற்றி, தப்பிக்க முயன்றபோதுதான் அறுகம்பே STF அதிகாரிகள் விரித்த வலையில் சிக்கினர்.

சிக்கியவை என்ன? (வேட்டையின் பகீர் பட்டியல்)
​சோதனையில் சிக்கிய பொருட்களின் விபரங்கள் அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காட்டு எருமை இறைச்சி:- 56 கிலோ, மானிறைச்சி:- 17 கிலோ, ​ஈரல் பகுதிகள்:- 16 கிலோ, அரிய வகை கடலாமை முட்டைகள்:- 57 (கடற்கரையில் வைத்து சிக்கியவை) 

6 பேர் கைது!!
​ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த "மின்னல் வேக" சோதனையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்த படகு, எஞ்சின் மற்றும் எரிபொருள் கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
​கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் அனைத்தும் மேலதிக நடவடிக்கைக்காக லாகுகலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்குப் பின்னால் பெரிய 'நெற்வொர்க்' ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது!