Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அமெரிக்கா சரமாரியாக தாக்கிய பின்பும் கூட.. ஈரான் சிறந்த நகர்வு .இஸ்ரேல் கனவு பலிக்கவில்லையே..

அமெரிக்காவின் படைகளை வைத்தே இஸ்ரேல் ஈரானை வீழ்த்த முடியும் என்று கனவு கண்டது.

டெஹ்ரான்: ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

ஈரான் மீது குண்டுபோட வைத்து அமெரிக்காவை போருக்குள் இழுத்துவிட இஸ்ரேல் முயன்றது..

அதாவது ஈரானை அமெரிக்காவை விட்டு தாக்க வைத்தால் ஈரான் அமெரிக்காவை பதிலுக்கு தாக்கும். இதற்கு அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பதிலடி கொடுக்கும்.

அப்படி நடந்தால் ஈரான் எளிதாக வீழ்ச்சி அடையும். இஸ்ரேல் அதிகம் போரில் ஈடுபடாமல், அமெரிக்காவை தனது கைக்கூலியாக பயன்படுத்தி ஈரானை வீழ்த்த முடியும்.

அமெரிக்காவின் படைகளை வைத்தே இஸ்ரேல் ஈரானை வீழ்த்த முடியும் என்று கனவு கண்டது.

ஈரான் ஸ்மார்ட் யுக்தி

ஆனால் ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

அதாவது ஸ்மார்ட்டாக செயல்பட்டு.. அமெரிக்க தளங்கள் எதையும் தாக்காமல், இஸ்ரேல் படைகளை மட்டுமே தாக்கி வருகிறது.

ஈரானிய அணு நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, டெஹ்ரான் இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை புதிய தாக்குதல்களைத் தொடங்கியது.

ஹைஃபா மற்றும் டெல் அவிவ் மீது ஈரான் இரண்டு கட்டங்களாக 27 ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படுகிறது.

இதில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர். டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தையும் குறிவைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானிய ஏவுகணை ஏவுதல் காரணமாக இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கின்றன” என்று குறிப்பிட்டது.

அமெரிக்கப் படைகள் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று ஈரானிய அணு நிலையங்களைத் தாக்கியதாக டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு ஈரானின் இந்த தாக்குதல் வந்துள்ளது.

இதனால் இஸ்ரேல் திட்டமிட்டபடி.. ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

ஈரான் – இஸ்ரேல் போரில் அமெரிக்காவின் தலையீடு

அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகப்போராக உருவெடுக்கும். அமெரிக்கா தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தலாம்.

இது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவிலும், போர்ச் சூழலிலும் ஒரு முக்கியமான தருணமாக அமைந்துள்ளது.

மேலும் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்பகுதியில் சுமார் 40,000 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். டிரம்ப் 8 அடி பாய்ந்தால் நாங்கள் 16 அடி பாய்வோம் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி நிரூபிக்கும் விதமாக.. அமெரிக்காவின் தளவாடங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.

அமெரிக்க ராணுவ தளவாடங்களை தாக்குவதற்காக.. குறைந்த மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை ஈரான் தயார் நிலையில் வைத்துள்ளது.

இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உலகப் போராக தீவிரமடையக்கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ஈரானின் முக்கியமான உள்கட்டமைப்பான ஃபோர்டோ அணு ஆலையை அமெரிக்கா தாக்கினால், ஈரான் மற்றும் அதன் பிராந்திய நட்பு விரைவான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கக்கூடும்..

நாம் தாக்கினால் அவர்கள் உடனடியாக அமெரிக்க தளவாடங்களை தாக்குவார்கள்.. இதனால் நிலைமை கைமீறும் என்று எச்சரித்துள்ளனர். இப்போது அமெரிக்கா தாக்கிவிட்டதால் அடுத்த கட்டமாக ஈரான் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.