Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டுக் கூட்டம் - 2026

இதன்போது மகோற்சவ காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் குறித்த கூட்டத்திலே விரிவாக ஆராயப்பட்டது.

எதிர்வரும் 22.03.2025 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15.04.2025 புதன்கிழமை நடைபெற உள்ள தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையவுள்ள மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ  முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் நேற்றையதினம் (12) சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசுவாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மகோற்சவ காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள், குடிநீர் மற்றும்  பாதுகாப்பு முன்னேற்பாடுகள், தங்க நகைகள் மற்றும்  பக்தர்களின் பொருட்கள் களவாடப்படாமல் பாதுகாக்கும் பொறிமுறைகள், காவல்துறையினரின் கடமைப்பொறுப்புக்கள் வீதிப்போக்குவரத்து,  விசேட திருவிழாக் காலங்களில் மாற்றுப் பாதைகளை ஏற்பாடு செய்தல், தேர்த் திருவிழாவின் போது ஒரு வழிப்பாதையாக மாற்றுதல், திருவிழா காலங்களில் மதுப்பாவனை மற்றும் புகைத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல், சாரணர் மற்றும் சென். ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப் பிரிவினரின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல், ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துதல், தற்காலிக விற்பனை நிலையங்களை அமைத்தல், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்தல், வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் அதற்குரிய சுகாதார, பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்துதல், ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கலை நிகழ்வுகள் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பங்களிப்பு, ஆலயச் சூழலிலுள்ள பாடசாலைகளின் பங்களிப்பு, முதலான இன்னோரன்ன விடயங்கள் தொடர்பாகவும் குறித்த கூட்டத்திலே விரிவாக ஆராயப்பட்டது.

 இக் கலந்துரையாடலில் மானிப்பாய் பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் செயலாளர், மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வலிகாமம் கல்வி வலையத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய பொறியியலாளர், மாநகர சபை உத்தியோகத்தர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர், மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி உப அதிபர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், தனியார் போக்குவரத்துச் சபை முகாமையாளர்,  மருதடி விநாயகர் ஆலய தர்மகத்தா சபை உறுப்பினர்கள், தனியார் போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள், சிற்றூர்தி சேவை சங்கத்தின் பிரதிநிதிகள், மேர்க்கன்ரைல்ஸ் பாதுகாப்பு சேவையின் முகாமையாளர், செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், J/138, J/140 கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.