Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சாவகச்சேரியில் மணற் கொள்ளையர்களால் ஊடகவியலாளருக்கு தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

,

சாவகச்சேரியில் மணற் கொள்ளையர்களால் ஊடகவியலாளருக்கு தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

சுயாதீன ஊடகவியலாளரும்-தேர்தல் கண்காணிப்பாளருமான சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசனுக்கு தொடர்ச்சியாக மணற்கொள்ளையர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்படி மணற் கொள்ளைக் குழுவினர் ஊடகவியலாளருடைய தந்தையாருக்கு விபத்தினை ஏற்படுத்தி விட்டு அது தொடர்பான பொலிஸாருக்கு தெரியப்படுத்தாமல் அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னர் இரவு வேளையில் தொலைபேசியில் ஊடகவியலாளருக்கு அழைப்பை எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அத்துடன் தாம் விபத்து ஏற்படுத்திய சம்பவத்தை வெளியே தெரிவித்தாலோ/பணம் தராவிட்டாலோ மீண்டும் இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்துவோம் எனவும் கூறி மிரட்டியுள்ளனர்.
அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சுபேசன் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் தொடர்ச்சியாக பல தடவைகள் தொலைபேசியில் அழைப்பெடுத்து உயிர் அச்சுறுத்தல் விடுத்ததுடன்-அவருடைய தேர்தல் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்த நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரால் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னராகவும் கள்ள மணல் அகழ்வு தொடர்பாக அறிக்கையிட்டமைக்காக மேற்படி ஊடகவியலாளரை மணற் கொள்ளையர்கள் அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.