Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோத கட்டடம்?

விகாரை வளாகத்தினுள், கட்டடம் ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு போன்றதொரு கிடங்கு காணப்பட்டுள்ளது.

சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். 

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. 

அதன்போது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. 
கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று இருந்தனர். 
அதன் போது விகாரை வளாகத்தினுள், கட்டடம் ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு போன்றதொரு கிடங்கு காணப்பட்டுள்ளது. 
விகாரை வளாகத்தினுள் புதிய கட்டடம் அமைப்பதற்கு விகாரதிபதியினால் சபையில் அனுமதி கோரப்படாத நிலையில், புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகம்  ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய கட்டடங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? என்பது தொடர்பில் விகாரதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.  
அதேவேளை, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பலரும் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், 
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தார்.
தனித்தனி விஜயமாக வந்திருந்த இரு குழுவினரும், விகாரை வளாகத்தில் சந்தித்து, பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

 

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு! – அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

 

image

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார்.
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு நேற்று மாலை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர்  சுகிர்தன் மற்றும் சபை உறுப்பினர்கள் நேரில் விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக கிடங்கு வெட்டப்பட்டிருந்ததாக தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பலரும் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், 
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தார்.
தனித்தனி விஜயமாக வந்திருந்த இரு குழுவினரும், விகாரை வளாகத்தில் சந்தித்து, பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.