Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கான நடமாடும் சேவை”

.

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக  “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்” எனும் கருப்பொருளிலான நடமாடும் சேவையானது எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது

பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமாகும் நடமாடும் சேவை மறுநாள் 15 ஆம் திகதி   உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.

இவ் நடமாடும் சேவையில்  ஆட்பதிவுச் சேவை, பிறப்பு இறப்புச் சான்றிதழ் வழங்கும் சேவைகள், ஓய்வூதியச் சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சேவைகள், மோட்டார் வாகனப் பதிவுகள், கம்பனிப் பதிவுகள், சுகாதார சேவைகள் – கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சேவைகள், ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள், வடக்கு மாகாணத்தின் சகல அமைச்சிற்குரிய சேவைகள், பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய சேவைகள் உள்ளிட்ட சேவைகள் நடைபெறவுள்ளது.

மேற்படி நடமாடும் சேவைக்கான முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திற்கும், உடுவில் பிரதேச செயலகத்திற்கும் – மேலதிக  மாவட்ட செயலர்(நிர்வாகம்) கே. சிவகரன், மேலதிக மாவட்ட செயலர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி ஆகியோர் சகிதம் சென்று உரிய முன்னாயத்த அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

இவ் முன்னாயத்த ஏற்பாடுகளில் பருத்தித்துறையில் பருத்தித்துறை உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரும், உடுவிலில் உதவிப் பிரதேச செயலாளரும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.