Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் மட்ட தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால உறவு பற்றி நினைவுகூர்ந்த தோழர் ஷீ தெய்ஃபென்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் மட்ட தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு. 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்நாட்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்களை உள்ளிட்ட குழுவினர் பீஜிங் நகரத்தில் பிரதான மக்கள் மண்டபத்தில் சீன கம்யூனிஸ் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள், நிலையியற் குழு உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புப் பிரிவின் பிரதானி தோழர் ஷீ தெய்ஃபென் உள்ளிட்ட மேல் மட்டத் தலைவர்களை சந்தித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால உறவு பற்றி நினைவுகூர்ந்த தோழர் ஷீ தெய்ஃபென், கட்சித் தொண்டர்களின் அரசியல் கோட்பாடு சார்ந்த அறிவினை தொடர்ச்சியாக விருத்தி செய்வதில் உள்ள முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், சீனா எந்தவொரு நேரத்திலும் தனது அனுபவத்தை மக்கள் விடுதலை முன்னணியுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இணங்க தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தாம் தயார் என்றும், அதுதொடர்பான சில புரிந்துணர்வுகள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடுன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த சுற்றுப்பயணத்தின் ஊடாக இன்னொருபடி விரிவடைந்தது என்று தோழர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்துடன், சீனாவின் ஜஜியான் மாநிலத்திலும் குய்ஷு மாநிலத்திலும் உள்ள ஊர்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் அந்த ஊர்களை முன்னேற்றுவதற்கு மேற்கொண்ட செயன்முறைகள் பற்றி சிறந்த புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்ள முடிந்ததென்றும் இலங்கையை அபிவிருத்தியடைச் செய்யும் வேலைத்திட்டத்தை வெற்றிமிக்கதாக்கிட இந்த அனுபவங்கள் உதவி புரியும் என்றும் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இறப்பர் - அரிசி ஒப்பந்தம் முதற்கொண்டு வெவ்வேறு முறைகளின் மூலம் சீனா இலங்கைக்கு உதவி புரிந்து வருவதாகவும் நிகழ்காலத்திலும் இலங்கைப் பாடசாலை பிள்ளைகளுக்கு சீறுடைத் துணிகளை வழங்கியமை குறித்து வரவேற்று கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா, 2026 ஆம் ஆண்டிலும் இவ்வாறு சீறுடைத் துணிகள் இலங்கையின் பாடசாலைகளுக்கு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் பிரதி அமைச்சர் தோழர் சுன் ஹெய்யான் உள்ளிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் மட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய விஜேசிங்க உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டிருந்தனர்.