Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ், ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

,

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ், ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு, காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் என்பன தொடர்பான களநிலைமைகளை வடக்கு மாகாண ஆளுநரிடம் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் துருவித் துருவி கேட்டறிந்து கொண்டார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் ஆளுநரிடம் பிரிட்டன் தூதுவர் கேட்டறிந்துகொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டுநாயக்காவுக்கும் பலாலிக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிப்பது பெருமளவு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவக் கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இதற்குரிய கோரிக்கை அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்