Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

மகாத்மா காந்தி அவர்களின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

39 வருடங்களுக்கு முன் நல்லூர் தேரடிவீதியில் காந்தீயம் படுகொலை செய்யப்பட்டதை அறிந்திருக்க மாட்டார்கள்.

மகாத்மா காந்தி அவர்களின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்  உள்ள இந்திய துணை தூதரகம் ஏற்பாடு செய்த இந்த நினைவு நிகழ்வில் போதனா வைத்தியசாலைக்கு முன்னால்  அமைந்துள்ள காந்தி அவர்களின் நினைவுத்தூவிக்கு இந்திய துணை தூதுவர் சாய் முரளி அவர்கள் மலர் மாலை அணிவித்து காந்தி அவர்களை நினைவு கூர்ந்தார்.

வாழ்நாள் பேராசிரியர் மோகனதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரீ. சத்தியமூர்த்தி, கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் சொல்லருவி லலிசன், மறுவன்புலவு சச்சிதானந்தம், காந்தி சேவா நிலைய அங்கத்தவர்கள், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது காந்தி சேவா நிலையத்தினால் காந்தி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததை  நினைவு கூர்ந்து வருடா வருடம் அவர்களால் வெளியிடப்படும் காந்தியம் பத்திரிகை இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பத்திரிகையினை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வெளியிட்டு வைத்து காந்தி நினைவேந்தலுக்கு வந்திருந்தவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இதன் போது உரையாற்றிய யாழ்ப்பாணம் இந்திய துணை  தூதுவர் சாய் முரளி அவர்கள், காந்தி அவர்களின் உண்மை சத்தியம் அவரின் வாழ்க்கை தத்துவங்கள் கோட்பாடுகள் தற்போது உள்ளவர்களுக்கு தேவையான ஒன்றாக காணப்படுவதுடன் உலகத்தில் வாழும் இந்த உயிரினங்கள் மற்றும் மக்கள் அவர்களின் வழிகளை பின்பற்றி சத்தியத்தின் நேர்மையில் வாழ்வது சிறந்தது என உதாரணமாக தெரிவித்தார்.

காந்தியவர்கள் இறக்கும் வரை சத்தியம் நேர்மை ஆகியவற்றை கடைபிடித்து வாழ்ந்ததே இன்று அவரை நாங்கள் அனுஷ்டிக்க காரணமாக உள்ளது. இறுதி வரை அவர் அகிம்சைக்காக போராடியவர்.
வாழ்க்கையில் எந்த ஒரு துன்பம் வந்தாலும் சத்தியம் உண்மை ஆகியவற்றை நாங்கள் கைவிடக்கூடாது என்றும் இறுதிவரை தர்மமே நிலை வரும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த உதாரணங்களை தற்போது உள்ளவர்களுக்கு தேவையென  கருதுபவர்கள், 39 வருடங்களுக்கு முன் நல்லூர் தேரடிவீதியில் காந்தீயம் படுகொலை செய்யப்பட்டதை அறிந்திருக்க மாட்டார்கள்.  ஆயினும்  நிகழ்வினில் கலந்து கொண்டிருப்பவர்களும் புதிதாக காவி கட்டினவர்களும் அறிந்திருப்பது காலத்தின் கொடுமை!