Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சிவபுரம் குத்துப்பாலத்தை அமைக்க 500 மில்லியன் ஒதுக்கீடு

வவுனிக்குளத்தின் கீழ்வரும் சிவபுரம் குத்துப் பாலம் நிர்மாணிக்கப்படவேண்டும் - துரைராசா ரவிகரன்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள சிவபுரம், குத்துப்பாலத்தினை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த சிவபுரம் குத்துப் பாலத்தினை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதுதொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனிக்குளத்தின் கீழ்வரும் சிவபுரம் குத்துப் பாலம் நிர்மாணிக்கப்படவேண்டும். வெள்ள அனர்த்தம் ஏற்படும்போது இந்த சிவபுரம் குத்துப் பாலத்தினூடான வீதிப்போக்குவரத்து முற்றாகத் தடைப்படும். இதனால் மாந்தைகிழக்கு தனித் தீவாக மாறுகின்ற நிலமை ஏற்படுகின்றது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகக் காணப்படுகின்றது. அத்தகைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக மாந்தை கிழக்குப் பிரதேசம் காணப்படுகின்றது.
எனவே இந்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு தற்போது ஆற்றுச்சருக்கையாக (கோஸ்வேயாக) காணப்படும் சிவபுரம் குத்துப்பாலத்தினை, மழைக்காலத்திலும் போக்குவரத்து தடைப்படாத வகையில் இருக்க அப்பாலத்தை பாரிய பாலமாக அமைப்பதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு  மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால இதன்போது பதிலளிக்கையில்,
குறித்த சிவபுரம் குத்துப்பாலத்தினை அமைப்பதற்கு 500மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதாக பதிலளித்தார்.