Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையணியில் கருணா குழு, இனியபாரதியும், பிள்ளையானும் ஒரு பெரும் வகிபாகத்தைக் கொண்டிருந்தார்கள்!

புலிகள் யாராலும் தோற்கடிக்கப்பட முடியாத பலம் பொருந்திய ஒரு இராணுவமாக வளர்ந்த போது அமெரிக்காவின் பார்வை புலிகள் மீது விழுகிறது.

சிறிலங்கா இன அழிப்பு பேரினவாத அரசின் ஆழ ஊடுருவும் படையணியில் கருணா குழு - குறிப்பாக தற்போது அனுரா அரசினால் கைதுசெய்யப்பட்டுள்ள இனியபாரதியும், பிள்ளையானும் ஒரு பெரும் வகிபாகத்தைக் கொண்டிருந்தார்கள்.                                                                            
இந்தக் கைதுகளின் பின்னால் பெரும் புலனாய்வுச் சதி வலைப் பின்னல்கள் உள்ளன. 
புலிகள் யாராலும் தோற்கடிக்கப்பட முடியாத பலம் பொருந்திய ஒரு இராணுவமாக வளர்ந்த போது அமெரிக்காவின் பார்வை புலிகள் மீது விழுகிறது.

அரச, ஆயுத தளபாட, பொருண்மிய , நிதி,  படைத்துறை பயிற்சி என்ற தளத்திலிருந்து ஒரு படி மேலே போய்  நேரடியாக 1996 இல் சிங்களப் படையில் ஒரு கொலைப் படையை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியது அமெரிக்கா.
விளைவாக உருவாகியதே சிங்கள இராணுவத்தில் ஆழ ஊடுருவித் தாக்கும் படையணி  (LRRP – Long Range Reconnaissance Patrol).
1996இல் சிங்களப் படையின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த (Special Force) கேர்னல் ராஜ் விஜேசிறி  என்பவர் தலைமையில் இது உருவாக்கப்பட்டது. 

ஆனால் அந்தப் படையணிக்கு  அப்போது வைக்கப்பட்ட பெயர்  'மஹாசொன் பலகாய'. தமிழில் சொன்னால் அரக்கர் படை அல்லது பேய் படை. 
புலிகள் மரபுப் படையணியாக வளர்ந்து விட்டதால் புலிகளின் பாணியில் தாக்குவதுதான் சரியானதென்று முடிவெடுத்தே இந்தப் படையணி அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது.
ஆனால் துணிச்சலும் தைரியமுமற்ற சிங்களப் படையிலிருந்து இந்த அணியை உருவாக்குவது அமெரிக்காவிற்குப் பெரும் சிரமமாக இருந்தது. அதனால் ஆரம்பத்தில் மேற்குலக அரசு சாராத கூலிப் படைகளக் களத்தில் இறக்கினார்கள்.                                                                                     
இது சிங்களப் படைகளுக்கு ஓரளவு துணிச்சலைக் கொடுத்தது. 

பிற்பாடு கருணாவின் வரலாற்று துரோகத்தால் கருணா குழுவும் ஆழ ஊடுருவும் படையணியின் அங்கமாகிய போது முழு துணிச்சலுடன் ஊடுருவி தாக்கினார்கள். 
இதில்  இனியபாரதியுடன்  கருணா குழுவைச் சேர்ந்த  ஜெயம், மார்க்கன், சின்னத்தம்பி, ஜீவேந்திரன், ரஞ்சன், இளங்கீதன், வீரா  முக்கிய பங்காற்றினார்கள். 
ஜெயசிக்குறு எதிர்ச்சமரில் இவர்கள் பங்குபற்றியிருந்ததால் வன்னிநிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் இவர்களுக்கு அத்துப்படி என்பதால் இன அழிப்புப் படைகளுக்குக் கூடுதல் துணிச்சல்.

சொந்த இனத்தைக் கொலை செய்கிறோம் என்ற அற உணர்வு கிஞ்சித்தும் இல்லாமல் வரலாற்று துரோகத்தைப் புரிந்தவர்கள் தற்போது வரிசையாகக் 'களி' தின்னப் போகிறார்கள். இதன் பின்னால் உள்ள ஏமாற்றுவித்தையை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.
ஆனால் இதனால் எமக்கு எந்தப் பலனும் இல்லை என்பதுதான் துயரம்.