Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களின் வணக்க நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியினால் எட்டு மாவட்டங்களினால் தயாரிக்கப்பட்ட நினைவு அறிக்கை வாசிக்கப்பட்டது

ஈழவிடுதலைப் போராட்டங்களில் முன்னோடியாகவும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து அண்மையில் மரணமான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நேற்று 26.01.26. மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அமெரிக்கமிசன் மண்டபத்தில் கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,கோவிந்தன் கருணாகரம்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் செ.நிலாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி திருமதி செல்வராணி மற்றும் திருகோணமலை மாவட்ட தலைவி தேவி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியினால் எட்டு மாவட்டங்களினால் தயாரிக்கப்பட்ட நினைவு அறிக்கை வாசிக்கப்பட்டதுடன் நினைவு உரைகளும் இடம்பெற்றது.