Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பாசையூர் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா!

அந்தோனியாரின் திருச்சொரூப தேர்ப் பவனி வீதியுலா வந்ததை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (13.06.25) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியாரின் திருச்சொரூப தேர்ப் பவனி வீதியுலா வந்ததை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருந்தனர்.

பாசையூர் பெருநாளுக்கு போதை மாத்திரை விற்பனை இளைஞன் கைது!

பாசையூர் அந்தோனியார் பெருநாளில் போதை மாத்திரை விற்பனை செய்யும் நோக்குடன் வந்த இளைஞன் ஒருவர் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் அந்தோனியார் தேவாலய திருச்சொரூப தேர்ப் பவனி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (13.06.25) மாலை இடம்பெற்றது. அதன் போது பெருமளவான பக்தர்கள் கூடியிருந்தனர்.
அந்நிலையில் , அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் , நடமாடிய இளைஞனை கண்ணுற்ற கடமையில் இருந்த காவற்துறையினர் இளைஞனின் செயற்பாட்டில் சந்தேகம் கொண்டு , இளைஞனை அழைத்து சென்று சோதனையிட்டனர்.
அதன் போது , இளைஞனனின் உடைமையில் இருந்து 10 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். அதனை அடுத்து இளைஞனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளில், திருவிழாவிற்கு வருவோருக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் அவற்றை எடுத்து வந்ததாக இளைஞன் கூறியுள்ளதாக காவற்துறையினர்  தெரிவித்தனர்.