Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் 9 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு இன்று விஜயம்!

.

ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு  இலங்கைக்கு இன்று (23) விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு  அறிக்கையை வெளியிட்டு, இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, 

ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்  இன்று நாட்டிற்கு வருகை தந்து 26 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள பிரச்சினைகளை மேற்கொள்ளவுள்ளார்.  

கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது, ​​உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.- என்றுள்ளது. 

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணையத்துடனும் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் துர்க்கின் வருகையின் போது, ​​அவர் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடு நடத்தவும், மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குச் சென்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.