Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உயிரிழந்த கால்பந்தாட்ட வீரர் மைதானத்தில் அடித்த இறுதி ‘கோல்; இறுதிச்சடங்கில் மனதை உருக்கிய சக வீரர்களின் செயல்!

மைதனாத்தில் வைத்து குறித்த வீரரின் பூதவுடலால் இறுதிக் கோல் அடிக்க வைத்த சகவீரர்களின் செயல்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கடந்த 13ஆம் திகதி  இடம்பெற்ற கோர விபத்தில்  உயிரிழந்த  வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிரபல  கால்பந்தாட்ட வீரர் யூட் மெரினின் இறுதிச் சடங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்தியில்  நேற்று இடம்பெற்றது.  

கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் அவரின் வீட்டில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

அப்போது மைதானத்தில் குறித்த வீரரின்  பூதவுடலால் செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இறுதிக்கோல் அடிக்கப்பட்டது. இதன்போது சக வீரர்கள் அவருக்கு இரு பக்கமும் நின்று முழறந்தாளிட்டு மரியாதை செய்தனர். 

அதன்பின்னர் வீரரின் பூதவுடல்  புனித அந்தோனியார் ஆலயத்திற்கு இரங்கல் திருப்பலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து  தாழையடி புனித அந்தோனியார் ஆலய சேமக்காலையில் யூட் மெரினின்  பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது 

இறுதிச் சடங்கில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மற்றும் இலங்கை முழுவதும் இருந்து பிரபல கால்பந்தாட்ட வீரர்கள் வீராங்கனைகள், இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மைதனாத்தில் வைத்து குறித்த வீரரின் பூதவுடலால் இறுதிக் கோல் அடிக்க வைத்த சகவீரர்களின் செயல் அனைவரது மனதையும் உருக வைத்துள்ளது. இளைஞரின் இழப்பைத் தாங்க முடியாத பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், வீரர்கள் உள்ளிட்டோருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.