Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்வைக்கப்பட்ட PTA ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரித்தது!

ஏப்ரல் 21, 2019 அன்று 268 பேரைக் கொன்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேகநபர்களில் ஒருவர் காவலில் இருந்தபோது இறந்துவிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சந்தேகநபர் ஒருவரின் வாக்குமூலத்தை மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விசாரணையில் ஒரு சந்தேகநபருக்கு எதிராக சாட்சியமாக ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரே சட்டம் PTA என பரவலாக அறியப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டமாகும். நீதிமன்றத்தால் அத்தகைய ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்ட ஒரு அரிய வழக்காக இது கருதப்படுகிறது.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளரால் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவரட்ண மாரசிங்க, சுஜீவ நிசங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால், நம்பகத்தன்மை இல்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (பெப்ரவரி 24) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் எட்டாவது சந்தேகநபரான அப்துல் மனாப் மொஹமட் சிரிதாஸின் வாக்குமூலமாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.

அந்த வாக்குமூலத்தின் சுயாதீனத்தன்மை குறித்தும் நீதிமன்றம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இலங்கை சட்டத்தின் கீழ் ஒரு சந்தேகநபருக்கு எதிராக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கக்கூடிய ஒரே சந்தர்ப்பம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் மாத்திரமே இருக்கும் சூழலில், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் நம்பகத்தன்மையற்றது என விசேட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருப்பது இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சட்ட மைல்கல் என ஒரு முக்கிய சட்ட நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21, 2019 அன்று 268 பேரைக் கொன்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேகநபர்களில் ஒருவர் காவலில் இருந்தபோது இறந்துவிட்டார்.
தலைமை நீதிபதியின் உத்தரவிற்கு அமைய, கொழும்பு 7, புல்லர்ஸ் மாவத்தையின் மூலையில் உள்ள முன்னாள் அமைச்சரின் வீட்டில் வாரத்தின் ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கு விசாரிக்கப்படுகிறது.