Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கச்சதீவு திருவிழா செல்ல குவியும் பக்தர்கள்!

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

கச்சதீவு திருவிழா செல்ல குவியும் பக்தர்கள்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திருவிழா ஏற்பாட்டுப் பணிகளுக்காகப் பங்குத்தந்தையர்கள், கடற்படையினர், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என 500 இற்கும் மேற்பட்டோர் கச்சதீவில் தங்கியிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

பக்தர்களின் வருகைக்காகப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். 

இந்நிலையில் இன்று பிற்பகல் பி.ப 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என்பதனால் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னர் தமது பயணத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது குறிகட்டுவான் இறங்குதுறையில் மக்கள் குவிந்தவண்ணம் காணப்படுகின்றனர்.