"கௌதம புத்தரையும் பௌத்த மதத்தையும் தமிழர்கள் உரிமை கொண்டாடும் வரை பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகள் தொடரும்"
தேரவாத பௌத்தத்தின் சித்தாந்த அடித்தளத்தையே, தமிழர்கள் தான் கட்டமைத்து வலுப்படுத்தியுள்ளனர். இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக்கொள்வது, சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் முழு கருத்தியல் அஸ்திவாரத்தையே சரித்துவிடும்.
"கௌதம புத்தரையும் பௌத்த மதத்தையும் தமிழர்கள் உரிமை கொண்டாடும் வரை பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகள் தொடரும்"
பண்டைய தமிழகம், பௌத்தத்தை உள்வாங்கிய ஒரு பிராந்தியம் மட்டுமல்ல; அது பௌத்த தத்துவத்தைச் செதுக்கி, வடிவமைத்து, ஆசியா முழுவதும் பரப்பிய ஒரு மாபெரும் அறிவார்ந்த மையமாகவும் (intellectual hub) திகழ்ந்தது. குறிப்பாக, பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரம் (Kanchi), தென்னிந்தியாவின் மிக முக்கியமான பௌத்த கற்றல் மையமாக விளங்கியது.
காஞ்சிபுரத்தின் அறிவார்ந்த பங்களிப்பு உலகளாவியது. ஜென் பௌத்தத்தின் (Zen Buddhism) நிறுவனராகக் கருதப்படும் போதிதர்மர் (Bodhidharma), காஞ்சியில் பிறந்த ஒரு தமிழ் இளவரசர் அல்லது அறிஞர் என்ற வலுவான மரபு உள்ளது. அதேபோல், 8ஆம் நூற்றாண்டில், தந்திரிக பௌத்தத்தை (Tantric Buddhism) சீனாவிற்கு எடுத்துச் சென்ற வஜ்ரபோதி (Vajrabodhi), ஒரு தமிழ் குடியைச் சேர்ந்தவர்.
மிக முக்கியமாக, சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் கருத்தியல் வேராகக் கருதப்படும் தேரவாத பௌத்தத்தின் (Theravada Buddhism) தூண்களாகக் கருதப்படும் பல அறிஞர்கள், தமிழர்கள் தமிழகத்துடன் ஆழமான தொடர்புடையவர்கள். சிங்கள-பௌத்த அடையாளம் தேரவாத பௌத்தத்துடனும், அதன் புனித மொழியான பாலியுடனும் (Pali) பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது.ஆனால், தேரவாத பௌத்தத்தின் மிக முக்கிய உரையாசிரியர்களில் (commentators) மூவரான புத்தகோசர் (Buddhaghosa), புத்ததத்தர் (Buddhadatta), மற்றும் தம்மபாலர் (Dhammapala) ஆகியோர் தமிழ் பிக்குகள்.
ஆய்வுகளின்படி, 'விசுத்திமக்க' (Visuddhimagga) என்ற புகழ்பெற்ற பாலி உரையை எழுதியவரும், இலங்கையில் பௌத்தத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்தவருமான புத்தகோசர், ஒரு "தமிழ் துறவி" (Tamil monk) என அடையாளம் காணப்படுகிறார். இதன் பொருள், சிங்களவர்கள் இன்று தங்கள் பிரத்யேக மரபாகக் கருதும் தேரவாத பௌத்தத்தின் சித்தாந்த அடித்தளத்தையே, தமிழர்கள் தான் கட்டமைத்து வலுப்படுத்தியுள்ளனர். இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக்கொள்வது, "பௌத்தம் = சிங்களம்" என்ற சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் முழு கருத்தியல் அஸ்திவாரத்தையே சரித்துவிடும். எனவே, இந்த வரலாற்றை இருட்டடிப்பு செய்வதும் "மறைப்பதும்" (brushed under the carpet) என்பது, ஒரு தற்செயலான நிகழ்வல்ல; அது ஒரு அரசியல் தேவை (political necessity) ஆகிறது.இதைச் சிங்கள பௌத்த தேசியவாதிகள் மட்டும் செய்யவில்லை .தமிழ் தேசியத்தை இந்து தேசியமாகக் குறுக்க நினைக்கும் தமிழ் போலிகளும் செய்கின்றனர்.சிங்கள மொழி தோன்றுவதற்கு முன்பே பௌத்தம் இலங்கைக்கு வந்துவிட்ட்து அதை முதில் கடைபிடித்தவர்கள் வளர்த்தவர்கள் தமிழர்கள்.
- சிவா சின்னப்பொடி


