Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டேன்: கனடா பிரதமர் விளக்கம்!

முக்கியமான ஒரு விடயம் குறித்து பேசும்போது, நான் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானவை - கார்னி.

தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டேன்: கனடா பிரதமர் விளக்கம் | Carney Admit Used Wrong Word On Trump Question

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து பேசும்போது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார் கனடா பிரதமர்.
தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த G20 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, கனடா பிரதமரான மார்க் கார்னி ஊடகவியலாளர்களை சந்தித்தபோது, ட்ரம்பை சந்திப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்கள் ஊடகவியலாளர்கள். 

பேச்சுவார்த்தைகள் நடத்தினோம், நானும் பிஸியாகிவிட்டேன், மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசுவோம் என்று கூறினார் கார்னி.

அப்போது, கடைசியாக கார்னி எப்போது ட்ரம்புடன் பேசினார் என்பது குறித்து விளக்குமாறு மீண்டும் ஊடகவியலாளர்கள் கேட்க, சட்டென, எனக்கென்ன கவலை அல்லது யாருக்கு என்ன கவலை என்னும் ரீதியில், ’Who cares?’ என்று கூறிவிட்டார் கார்னி.
எதிர்க்கட்சியினர் அவரது பதில் குறித்து கடுமையாக விமர்சிக்கத் துவங்க, தற்போது தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார் கார்னி. 

முக்கியமான ஒரு விடயம் குறித்து பேசும்போது, நான் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானவை என்று கூறியுள்ள கார்னி, நான் கனடாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கனேடியர்களுக்கு ஒரு உறுதி அளித்தேன்.
நான் தவறு செய்தால், அதை நான் ஒப்புக்கொள்வேன் என்று நான் கூறியிருந்தேன். அதன்படி, நான் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கார்னி.