Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!

காதல் விவகாரம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்

தனது வீட்டு சாமி அறையில் தூக்கிட்டு  மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை(21) அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்ள சாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில்   24  வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின்  மரணம் தொடர்பில்  சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  நூர்டீன் முஹம்மட் சர்ஜுன்  பணிப்புரைக்கமைய    திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு  தூக்கினால் மூச்சு திணரல் ஏற்பட்டு  மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு  சடலம் உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு   மரணமடைந்தவர்  தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்ததுடன் காரைதீவு -12 பிரதான வீதியை சேர்ந்த ரவிந்திரன் மிதுசன் என்பவர் ஆவார்.காதல் விவகாரம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்குறித்த சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.