சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடனுடன் தொடர்புடைய சகல மதிப்பாய்வு நடவடிக்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடனுடன் தொடர்புடைய சகல மதிப்பாய்வு நடவடிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடனுடன் தொடர்புடைய சகல மதிப்பாய்வு நடவடிக்கைகளையும் 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியாகும்போது நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வங்கி ஆளுநர், தெரண தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட உரையாடலின்போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வொஷிங்டன் நகரில் இடம்பெறும் இந்த கூட்டத்தொடரில் உலகிலுள்ள நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் இந்த கூட்டதொடர் இலங்கைக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. அதேபோன்று இருதரப்பு மற்றும் பலதரப்பு என்ற அடிப்படையில் ஏனைய பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்திக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது.
கடந்த வருடம் இலங்கை ஐந்தாவது கடன் மீளாய்வு முழுமை செய்திருந்தது. இந்த மதிப்பாய்வு எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பணிப்பாளர் சபையில் முன்வைக்கப்படும். அதன்போது முக்கியமான பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அதில் ஒன்று, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளவேண்டியது அவசியமாகும். அதற்கு மேதிகமாக மேலும் முக்கியமான மறுசீரமைப்புகளை செய்ய வேண்டியுள்ளது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்வது போன்ற விடயங்கள் அதில் உள்ளடங்குகின்றன. செலவுகளை ஈடுசெய்யக்கூடிய வேலைத் திட்டம், செலவை மதிப்பீடு செய்யக்கூடிய வகையில் எளிமையான வேலைத் திட்டம், செலவு அடிப்படையிலான நிதி நிலைப்படுத்தல் உள்ளிட்ட மேலும் இரு விடயங்களை செய்ய வேண்டியுள்ளது.
பொருளாதார மந்தநிலையினால் அதிகம் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டிலுள்ள மக்களுக்கு இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்குவது இலங்கை மக்களுக்கு மிகவும் அவசியமான விடயமாகவுள்ளது. அடுத்த, ஊழல் மற்றும் அரச பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்.


