Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வல்வெட்டித்துறையில் தேசிய தலைவருக்கு சிலையா ?

.

வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம் , இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர் வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் உறுதி அளிப்பாரா ? என வல்வெட்டித்துறை நகர சபை வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றில் , தேசிய தலைவருக்கு சிலை வைப்போம், இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர்களை பதிப்போம் என குறிப்பிட்டுள்ளார்கள்.
 
குறித்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில்,  பாடலில் குறிப்பிட்டுள்ளது போன்று , செய்வார்கள் எனில் , அதனை கடற்தொழில் அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தட்டும். அதனை விடுத்து, ஆதரவு பாடல் என பாடலில் யார் குறிப்பிட்டார்கள் என குறிப்பிடாமல் மக்களை குழப்பும் செயலில் ஈடுபட வேண்டாம் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.