Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

கைமாறிப்போன கதிர்காமக் கந்தன்!

கதிர்காம கந்தனின் 11 ஆம் நாள் - முத்த தமிழ்க் குடியின் முதுகெலும்பான கதிர்காமக் கந்தன் முகம் மாற்றப்பட்ட நிலையில் வீதி உலா!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலய திருவிழாவின் 11 ஆவது நாள் வீதி உலா நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இடம்பெற்றது. 

கதிர்காமம் கந்தன் ஆலய திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் இந்த வருட கதிர்காமம் கந்தன் ஆலய  திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

தொடர்ச்சியாக 15 நாள்கள் இடம்பெறும் திருவிழாவில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள், ஊர்வலங்கள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் கதிர்காம கந்தனைக் காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன வேறுபாடுகளின்றி பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். 

கதிர்காமம் கந்தன் ஆலய  திருவிழா, இலங்கையில் ஆடிவேல் உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தளவில் மிகவும் பிரபலமான ஓர் ஆலயமாக கதிர்காம கந்தன் ஆலயம் பார்க்கப்படுகின்றது. 

இந்தவருடம் கடந்த ஜூன் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரவாரமாகி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில் ஒவ்வொரு நாள் திருவழாவிலும் பல்லேறு நிகழ்வுகள் கலாசார ரீதியாக இடம்பெறுகின்றது. குறிப்பாக கதிர்காம கந்தனில் எசலப்பெரஹரா ஊர்வலம் மிகவும் சிறப்பானதொன்றாகக் காணப்படுகின்றது. 

அந்த வரிசையில் நேற்று இடம்பெற்ற 11ஆவது நாள் ஊர்வலத்தில் பக்தர்கள் புடைசூழ வீதி உலா இடம்பெற்றது. அதில் பார்ப்பவர்களைக் கவரும் வகையில் பல கலாசார நிகழ்வுகளுடன் வீதி உலா உற்சவம் இடம்பெற்றது. 

கதிர்காம கந்தனின் பெருந்திருவிழா ஜூலை 10 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையு என்பது குறிப்பிடத்தக்கது.