Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஆளுநரின் உத்தரவை மீறி , வாக்குறுதி வழங்கிய பலாலி காவற்துறையினர்!

பலாலி காவற்துறையினர் வழமை போன்றே மயிலிட்டியில் இருந்து சேவைகளை ஆரம்பியுங்கள் என அனுமதி!

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு  வடமாகாண ஆளுநரின் உத்தரவை மீறி , பலாலி காவற்துறையினர்  வாக்குறுதி வழங்கியுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்தே சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் , அதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவற்துறையினருக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்திருந்தார்.

அந்நிலையில் 769 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுவோர் , தம்மை மயிலிட்டியில் இருந்து சேவைகளை ஆரம்பிக்க அனுமதிக்க வேண்டும் என கோரி இன்றைய தினம் புதன்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், மயிலிட்டி பகுதியில் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தன் போது அவர்களுடன் பேச்சுக்களை நடாத்திய பலாலி காவற்துறையினர்  வழமை போன்றே மயிலிட்டியில் இருந்து சேவைகளை ஆரம்பியுங்கள் என அனுமதி வழங்கியதை அடுத்து , அவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் , 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மா மற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதனைச் செயற்படுத்துமாறு பிரதிப் காவற்துறை மா அதிபருக்கு தொலைபேசியூடாக இன்றைய தினம் புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளார்.