Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல்!

"அண்ணன் மகிந்த, இன்று முன்னாள் ஜனாதிபதியாக தனது ஓய்வு நேரத்தைக் கழிக்க கொழும்பில் வீட்டுவசதிப் பிரச்சினை இருக்காது என்று நான் நம்புகிறேன்”

இந்த விவகாரம் குறித்து உதயங்க வீரதுங்கவின் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,“முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் சட்டம் கொண்டுவரப்பட்டு, விஜேராம மாவத்தை, எண். 117 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு மஹிந்த ராஜபக்ச செல்லும் கடைசி நாள். 
செப்டம்பர் 10ஆம் திகதி ஆகும். அன்று, முன்னாள் ஜனாதிபதியுடன் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஒரே நபர் நான்தான். உண்மையில், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற அவருக்கு மனமில்லை.

கொழும்பில் வாங்கிய முதல் வீடு.
ஆனால் மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முடியாதது குறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை நான் கவனித்தேன். 1980 ஆம் ஆண்டு மிரிஹான, கல்வல வீதியில் தனது முதல் வீட்டை வாங்கியதை மஹிந்த அண்ணன் நினைவு கூர்ந்தார்.

அங்கிருந்து தான் நான் நாளந்தா கல்லூரிக்குச் சென்றேன். பின்னர், ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வெளிநாடு சென்றேன். அந்த வீடு மிகவும் அதிர்ஷ்டமான வீடு என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். அந்த வீட்டிற்கு வந்த பிறகு மஹிந்த அண்ணன் திருமணம் செய்து கொண்டார்.
அதேபோல், டட்லி அண்ணன், பிரீத்தி அக்கா, கந்தானி அக்கா, கோட்டா அண்ணன் ஆகியோர் அந்த வீட்டிற்கு வந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில், ஜெயந்தி அக்கா மற்றும் பசில் அண்ணனும் அந்த வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் தங்கள் முதல் வீட்டை கட்ட முடிவு செய்தனர்.

மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல் | Mahinda Has A House In Mirihana

அதனால்தான் எனது முதல் வீடும் 1991இல் மிரிஹான பொலிஸ் பிரிவில் கட்டப்பட்டது. அரசாங்க உத்தியோகபூர்வ குடியிருப்புகள் இல்லாத நேரத்தில் மெதமுலனவில் இருந்து கொழும்புக்கு வந்து ஒரு வீட்டை வாங்கிய எங்கள் அண்ணன் மகிந்த, இன்று முன்னாள் ஜனாதிபதியாக தனது ஓய்வு நேரத்தைக் கழிக்க கொழும்பில் வீட்டுவசதிப் பிரச்சினை இருக்காது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.