Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இந்திய துணைத் தூதுவர் - மஹிந்த ராஜபக்ஷ இடையில் சந்திப்பு!

,

இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்திய துணைத் தூதுவர்  ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சார்பில் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியிருந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.