Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கல்!

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் 'பராமரிப்புப் பிரிவு'!

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு  நியமனக் கடிதம் வழங்கல்!

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் (PMCU) சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவொன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (09) சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். பிரிமியா தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு, உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.  இதனைத்தொடர்ந்து, மருத்துவ நிலையத்தின் உட்கட்டுமான அபிவிருத்திகளை விரிவாக்கம் செய்வது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது, நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காணியினை பாராளுமன்ற உறுப்பினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.  தற்போதைய இடவசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு இன்னும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்க முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் 'பராமரிப்புப் பிரிவு'!

கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நோயாளர் சேவைகளை தடையின்றி முன்னெடுக்கும் நோக்கில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக பராமரிப்புப் பிரிவொன்று (Maintenance Unit) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்  திங்கட்கிழமை  (09) குறித்த பிரிவினை நாடாவெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட இப்பிரிவு, பிராந்திய திட்டமிடல் பிரிவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளது. இதற்கென Plumber, Electrician, Carpenter போன்ற துறையில் அனுபவமுள்ள ஊழியர்கள் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார நிறுவனங்களில் ஏற்படும் பின்வரும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதே இப்பிரிவின் பிரதான நோக்கமாகும்.

வைத்தியசாலைகளில் திடீரென ஏற்படும் மின்சாரத் தடைகள் மற்றும் நீரிணைப்புப் பிரச்சினைகளை உடனுக்குடன் சீர்செய்தல். சேதமடைந்த கட்டடப் பகுதிகள் மற்றும் ஏனைய தளபாடப் பழுதுகளை இனங்கண்டு அவற்றை விரைவாகத் திருத்தியமைத்தல். இப்பராமரிப்புப் பிரிவு இயங்குவதன் ஊடாக வைத்தியசாலைகளில் ஏற்படும் சிறிய தொழில்நுட்பக் கோளாறுகளால் நோயாளர் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், நீண்டகாலம் காத்திருக்காமல் உடனுக்குடன் தீர்வுகளை வழங்கவும் முடியும்.