Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பரிஸிற்கு நாடுகடத்தப்படும் இலங்கை ஆவா குழு தலைவர்

,

2022 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே ஒரு போட்டி கும்பல் மீது நடந்த மிக மோசமான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்தாண்டு டொராண்டோவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஆவாகுழு தலைவனை நாடு கடத்த ஒன்ராறியோ நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

டொராண்டோ தெற்கு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரசன்னா நல்லலிங்கம், கனடாவின் நீதித்துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் 30 நாட்களுக்குப் பின்னர் பிரான்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவா குழுவின் தலைவன் என அறியப்படும் நல்லலிங்கம், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி,  ஆவா (AAVA) கும்பலின் நான்கு உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும், பின்னர் போட்டி குழுவினரின் 'வாகனத்தை அடித்து நொருக்க' பரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள லா கெர்னெவ் என்ற நகருக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட குழுவினர் இரண்டு கார்களில் நள்ளிரவு லா கெர்னெவ்வுக்கு சென்றுள்ளனர்.. நல்லலிங்கத்தின் கூட்டாளிகள் என்று கூறப்படும் நான்கு பேர், வாகனம் ஒன்றிலிருந்து கத்தி மற்றும் வாள்களுடன் இறங்கிய காட்சிகள் அந்த நாட்டு பாதுகாப்பு கெமரா காட்சிகளில் காணப்பட்டுள்ளன.

நல்லலிங்கத்தின் வழக்கறிஞர்கள், தமது கட்சிக்காரர் ஆவா குழு உறுப்பினர்களுக்கு காரை நொறுக்குமாறு அறிவுறுத்தியதை ஒப்புக்கொண்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த ஆவா குழு தலைவனின் சார்பில் ஆஜாரான சட்டத்தரணிகள் தெரிவிக்கையில்,

அனைத்து வழக்குகளையும் போலவே, நல்லலிங்கத்தை நாடுகடத்துவது குறித்த இறுதி முடிவு கனடா நீதி அமைச்சரிடம் உள்ளது. அவர் செயல்முறையை நிறுத்த அல்லது 30 நாட்கள் வரை மேலதிக நிபந்தனைகளை விதிக்க சமர்ப்பிப்புகளைப் பெறலாம்.

இந்த முடிவை ஒன்ராறியோவின் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். இந்த வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றம் நாடுகடத்தல் செயல்முறை குறித்து இறுதி முடிவை எடுக்கும் வரை ஒருவரை நாடுகடத்த முடியாது. மேலும் அமைச்சரிடம் சமர்ப்பிப்புகளைச் செய்துஇ பிரான்சிடம் அவர் சரணடைவதைத் தடுக்க மேலும் வழிகளைப் பின்பற்ற திட்டமிட்டுள்ளளோம் என நல்லலிங்கத்தின் சட்டதரணிகள் தெரிவித்துள்ளனர்.