Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இணையவழி மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது

.

ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, இரு பகுதிகளிலும் அமைந்திருந்த ஐந்து தங்குமிட விடுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இவ்விடுதிகளில் தங்கியிருந்து இணையவழி மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டோரில் 126 பேர் சீன நாட்டவர்கள் எனவும் 4 பேர் மியான்மர் நாட்டவர்கள் எனவும் 4 பேர் தாய்வான் நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மடிக்கணினிகள், கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.