Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இந்திய அமைதிப்படை செய்த கொக்குவில், பிரம்படி, பொற்பதி வீதிப் இனப்படுகொலை – 12 அக்டோபர் 1987

இந்திய அமைதிப்படை செய்த இனப்படுகொலை...

இந்திய அமைதிப்படை செய்த கொக்குவில், பிரம்படி, பொற்பதி வீதிப் இனப்படுகொலை – 12 அக்டோபர் 1987
கொக்குவிற் கிராமம் யாழ் மாவட்டத்தில் நல்லூர்ப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் அமைந்துள்ள இடத்திலிருந்து மேற்குப் புறமாக ஏறக்குறைய ஐநூறு யார் தூரத்தில் கொக்குவில் பிரம்படி வீதி உள்ளது.
இந்திய இராணுவத்தினர் 1987ஆம் ஆண்டு பத்தாம் மாதம் பன்னிரண்டாம் திகதி பலாலியிலிருந்து யாழ் நகரை நோக்கிய தொடருந்து நிலைய வீதியூடாகக் கனரக வாகனங்கள் மூலம் முன்னேறி கொக்குவில் பிரம்படிப் பகுதியினைச் சுற்றிவளைதத்து. பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என யாவரையும் வீதிகளுக்கு அழைத்து வந்து சுட்டதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள்.

அன்றையதினம் வேறு ஒரு பகுதியூடாக வந்த இந்திய இராணுவத்தின் மற்றுமொரு அணியினர்,கொக்குவில் பொற்பதிப் பகுதியைச் சுற்றிவளைத்து மக்களைக் கைதுசெய்து கொக்குவில் பிள்ளையார் ஆலயத்துக்கு வடக்காக நானூறு யார் தூரத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தின் அருகே வீதியோரத்தில் அனைவரையும் உயிருடன் நிலத்தில் படுக்க வைத்து இராணுவத்தின் கவச வாகனங்கள், டாங்கிகளை அவர்கள் மீது ஏற்றிப் படுகொலை செய்தனர். இதில் அறுபத்துநான்கு பொதுமக்கள் உயிரிழந்தார்கள். 1987 ஒக்டோபர் பன்னிரண்டாம் திகதி பிரம்படிப் பகுதி, கொக்குவில் பொற்பதிப் பகுதி ஆகிய இடங்களில் நடந்த சம்பவத்தில் நூறிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள்..