Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்...!

நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தி அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தினார்.

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மீது  நீர்மூழ்கி கப்பல் தாக்குதல்...! 
இதில் குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 78 பேர் காயமடைந்துள்ளனர் என்று இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கப்பலைத் தாக்கியது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கப்பல் மூழ்கியுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில்  தாக்குதலால்  ஈரானிய போர்க்கப்பல் சேதமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை முற்றிலுமாக நிராகரிப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.  ஈரானிய கப்பல் விபத்து தொடர்பாக இலங்கை கடற்படை நேற்று (04) நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) இன்று அதிகாலை ஒரு அபாய சமிக்ஞை கிடைத்ததாகவும், இதன்படி "எமக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய நாங்கள் விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற போது, ஒரு பெரிய எண்ணெய் படலத்தை மாத்திரமே காண முடிந்தது. எனவே அந்தக் கப்பல் மூழ்கிவிட்டது எனக் கூற முடியும். எவ்வாறாயினும், இலங்கை கடற்படையினர் இதுவரை கப்பலில் இருந்த 32 பேரை மீட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னரே மேலதிக விபரங்களைக் கூற முடியும். இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை கடற்படையால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில்  தெரிவித்தார். 

அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதல்! 
அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலால் இலங்கை கடற்கரையில் மூழ்கிய ஈரானிய கடற்படைக் கப்பலான IRIS Denaவிலிருந்து இதுவரை சுமார் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார். இதேவேளை இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 32 ஈரானிய கடற்படை வீரர்கள் தற்போது சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு அருகே சர்வதேச கடல் பகுதியில், ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா, நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தி அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தினார். இலங்கையின் தென் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் 'IRIS Dena' மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் அதிரடி காட்சிகளை அமெரிக்க இராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்ட 'டொர்பிடோ' (Torpedo) ரக ஏவுகணை தாக்கி அழித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில் கப்பலில் இருந்த 180 ஈரானிய கடற்படை வீரர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

32 பேர் மீட்கப்பட்டு காலியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்குள்ளான கப்பல் கடலில் மூழ்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.