Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரித்தானியாவில் மூன்றாவது வருடமாக தமிழர் பாரம்பரிய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான Kent premier league என்னும். KPL போட்டி

ஏல நிகழ்வில் பிரித்தானியாவின் 50முன்னணி மற்றும் சிறப்பு வீரர்கள் 8பிரிமியர் கழகங்களிற்காக புள்ளிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிரித்தானியாவில் தமிழர்களால் பாரம்பரிய முறையில் விளையாடிக்கொண்டிருக்கும் கரப்பந்தாட்ட போட்டிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாக பல ஆண்டுகளாக கழக ரீதியாக விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களை புள்ளிகளின் அடிப்படையில் ஏல முறையில் தெரிவுசெய்து புதிய பிரிமியர் லீக் அணிகளில் விளையாடும்h மாபெரும் லீக் தொடரான Kent premier league என்னும் KPL போட்டியானது மூன்றாவது வருடமாக எதிர்வரும் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை London Plumstead ல் உள்ளTeviot rangers வெளியக மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த Kent premier league போட்டியானது கடந்த 2023 ல் Kent பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட சில கழகங்களிற்கிடையில் ஒரு கழக போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு 2024ல் பிராந்திய மயமாக்கப்பட்டு Kent பிராந்தியத்தில் வசிக்கும் வீரர்களை மட்டும் உள்ளவாங்கி புள்ளிகள் மூலம் வீரர்கள் ஏல முறையில் தெரிவுசெய்யப்பட்டு 10புதிய பிரிமியர் லீக் அணிகளில் விளையாடி மாபெரும் போட்டியாக  நடைபெற்றது.இந்த வருடம் 2025ல் மூன்றாவது முறையாக வீரர்களின் வேண்டுகோளை ஏற்று போட்டியின் எல்லைகள் விரிவாக்கப்பட்டு பிரித்தானியா முழுவதும் கழகங்களில் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களை போட்டியில் தெரிவுசெய்வதற்கு இந்த வருடத்திற்கான ஏல நிகழ்வு கடந்த 09/07/2025 அன்று லண்டன் shooters hill sixth form கேட்போர் கூடத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏல நிகழ்வில் பிரித்தானியாவின் 50முன்னணி மற்றும் சிறப்பு வீரர்கள் 8பிரிமியர் கழகங்களிற்காக புள்ளிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இவ் 2025 ஆண்டுக்கான பிரிமியர் அணிகளாக...
1.UK STORMS 
2.LEOPARD TAMIL TITAN 
3.MAIDSTONE SUPER KINGS 
4.KARIKAALAN UK
5.LONDON LIONS 
6.EELAM KINGS WALES
7.RIDERS 
8.RISING STARS 

ஆகிய 8 அணிகள் பங்கெடுத்து சிறப்பிக்கின்றன,அத்துடன் இந்த ஆண்டு புது முயற்சியாக பிரித்தானியாவில் வளர்ந்து வரும் கழகங்களை ஊக்குவிக்கும் முகமாக 10 வளர்முக அணிகளிற்கான போட்டியும் இந்த வருடத்திற்கான KPL போட்டியில் நடைபெறவுள்ளது. மேலும் இவ்வருடத்திற்கான 2025 போட்டியின் பிரதான அனுசரணையாளர்களாக Kent Maidstone நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 
அப்பம்மா கிச்சன் இணைந்துள்ளார்கள்.