இஸ்ரேலை ஸ்தாபிப்பதற்கு அமெரிக்காவும் யூதர்களும் ஐ.நா.வுக்கு இலஞ்சம்
.
பலஸ்தீனம் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கிய பேரரசின் பகுதியாக இருந்தது.
1896 ஆம் ஆண்டில் அங்கிருந்த மக்கள் தொகையில் சுமார் 95சதவீதம் பேர் அரேபியர்கள், அவர்கள் தான் தொண்ணூறு சதவீதமான நிலங்களின் சொந்தக்கார்ர்களாக இருந்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பலஸ்தீனம் பிரித்தானிய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
பிரித்தானியாவின் கட்டாய ஆதிக்க அதிகாரமும் மற்றும் சியோனிச யூதர்களும் பலஸ்தீனர்களை அழித்தொழித்து சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றி அவர்களின் நிலங்களில் ஒரு அரசை நிறுவவும் முடிவு செய்தனர்.
அதற்காக, அமெரிக்காவும் சியோனிஸ்டுகளும் பலஸ்தீனத்தை பிரித்து யூதர்களுக்கு ஒரு தனி அரசை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையை நாடினர்.
சியோனிஸ்டுகள் மோசடி, இலஞ்சம் மற்றும் அச்சுறுத்தலில் ஈடுபட்டனர் அத்தோடு பாலஸ்தீனத்தை பிரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு அழுத்தம் கொடுத்தனர்.
ஹைட்டி, லைபீரியா, பிலிப்பைன்ஸ், சீனா, எத்தியோப்பியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் பலஸ்தீன் பிரிக்கப்படுதை எதிர்த்தன.
சியோனிஸ்டுகள் அமெரிக்க செல்வாக்கை பயன்படுத்தி இந்த நாடுகளை ஆதரவாக வாக்களிக்க கட்டாயப்படுத்த கடுமையான அழுத்தத்தைப் பயன்படுத்தினர்,
அமெரிக்க அரசாங்கத்திற்காக பணியாற்றிய மற்றும் குறிப்பாக யூத பிரிவில் தீவிரமாக செயல்பட்ட சியோனிசவாதியான ரொபர்ட் நெதன், “நாங்கள் கையில் கிடைத்த எல்லா கருவிகளையும் பயன்படுத்தினோம்” என்று எழுதி உள்ளார்.
நீண்டகால ஜனாதிபதி ஆலோசகரும் நிதியாளருமான பெர்னார்ட் பாருச், “பிரிவினைக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அமெரிக்க உதவியை இழக்கும் நிலை ஏற்படும” என்று பிரான்சிடம் கூறினார்.
வெள்ளைமாளிகையின் உயர்மட்ட நிர்வாக உதவியாளர் டேவிட் நைல்ஸ் லைபீரியாவுக்கு அழுத்தம் கொடுத்தார், ரப்பர்துறை தொழிலதிபர் ஹார்வி ஃபயர்ஸ்டோன்ஸ{ம் லைபீரியாவுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இலத்தீன் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தமக்குச் சதகமாக வாக்களித்தால் ‘பான்-அமெரிக்கன்’ நெடுஞ்சாலை கட்டுமானத்திட்டம் சாத்தியமாக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
பிரதிநிதிகளின் மனைவிகள் ‘மிங்க் கோட்டுகளை’ பெற்றனர். கியூபா பிரதிநிதியின் மனைவி தனக்கு கிடைத்ததை ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்தார் (மிங்க் கோட் என்பது மிருகங்களின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் விலை உயர்ந்த குளிர்கால மேலாடை)
கொஸ்டாரிக்காவின் ஜனாதிபதி ஜோஸ் ஃபிக்யூரெஸ் ஒரு வெற்று காசோலைப் புத்தகத்தைப்பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
பிரிவினையை எதிர்க்கும் அதன் உண்மையான நிலைப்பாட்டை ஹைட்டி மாற்றிக்கொண்டால் பொருளாதார உதவி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
நீண்டகால சியோனிச உச்ச நீதிமன்ற நீதிபதி ஃபெலிக்ஸ் ஃபிராங்க்ஃபர்ட்டர், பத்து செனட்டர்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனின் உள்நாட்டு ஆலோசகர் கிளார்க் கிளிஃபோர்ட் ஆகியோருடன் பிலிப்பைன்ஸை அச்சுறுத்தினார்.
திட்டத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்பு, பிலிப்பைன்ஸ் பிரதிநிதி பிரிவினைக்கு எதிராக உணர்ச்சிபூர்வமான உரையை நிகழ்த்தினார்,
யாருமே மறுக்க முடியாத வகையில், தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கும், தங்கள் சொந்த நிலத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் ஒரு மக்கள் பிரிவுக்கு இருக்கின்ற அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாக அவ்வுரை அமைந்தது இருபத்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, கடுமையான சியோனிச அழுத்தத்திற்குப் பிறகு, ஐ.நா.பிரதிநிதிகள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுக்குழு பிரிவினையை ஆதரிக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஹெரி ட்ரூமன் வலியுறுத்தியபோது, அமெரிக்க பிரதிநிதிகள் பலர் இராஜினாமா செய்ய முனைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி அதைத் தடுக்க ஐ.நா. விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை பணிப்பாளரை அவசரமாக நியுயோர்க்கிற்கு அனுப்பினார்.
கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும், 1947 நவம்பர் 29 அன்று பிரிவினைக்கான, 181ம் இலக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி ட்ரூமன் பலஸ்தீனத்தில் சியோனிச அரசுக்கு வாக்களித்து இஸ்ரேல் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தார், அந்த இஸ்ரேல் தான் தற்போது அந்தப் பிராந்தியத்தையே கொலைக்களமாக மாற்றியுள்ளது.
78 சதவீதமான பலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டது. பலஸ்தீனியர்கள் காசா உள்ளிட்ட அகதி முகாம்களுக்குள் தள்ளப்பட்டனர், அதேகாஸாவில் தான் அவர்கள் இப்போது படுகொலை செய்யப்பட்டும் வருகின்றனர்.
1948 பிப்ரவரி 9 ஆம் திகதி வெளியான சிகாகோ டெய்லி ட்ரிப்யூனின் கூற்றுப்படி, “பலஸ்தீனப் பிரிவினைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வாக்குகளை மாற்றுவதற்கு ஜனாதிபதி ட்ரூமன் தனது வெளியுறவுத்துறையினர் மீது முன்னெப்போதையும் விட கடுமையாக நெருக்குலை பியோகித்தார்” என்றும் “ட்ரூமன் வெள்ளை மாளிகைக்கு பொறுப்பான பிரதி செயலாளர் லோவெட்டை அழைத்து அமெரிக்காவுடன் பொதுவாக அணிசேரும் நாடுகள் ஆனால் பலஸ்தீன விடயத்தில் அவ்வாறு நடந்து கொள்ளத் தவறிய நாடுகளிடமிருந்து முழு விளக்கத்தைக் கோருங்கள்” என்று உத்தரவிட்டார்.
அக்காலத்தில் முதன்முதலாக, குறைந்தது 33 பலஸ்தீனிய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், அதேநேரம், அடிப்படை அமெரிக்க கொள்கைகளுக்கும் அமெரிக்க நலன்களுக்கும் சியோனிசம் முரணானது என்று கருதி, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பிரிவினை திட்டத்தை கடுமையாக எதிர்த்தது.
அண்மிய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை அலுவலகத்தின் இயக்குனர் லோய் ஹென்டர்சன், வெளியுறவுத்துறை செயலாளருக்கு எழுதிய குறிப்பில், “பிரிவினயை பலவந்தமாகவே செயல்படுத்த வேண்டும் காரணம் அது எந்தக் கொள்கையையும் அடிப்படைகளையும் கொண்டதல்ல” என்று அதில் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ஹெரி ட்ரூமன், அனைத்து ஆலோசனைகளையும் புறக்கணித்து, காசாவில் இன்று பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையில் ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேலை ஆதரிக்கும் அதே விதத்தில் சியோனிஸ வாதிகளை அன்றுஆதரித்தார்.
இரண்டாம் உலகப் போரின் புகழ்பெற்ற தளபதியும் இராணுவ திட்டத்தின் வடிமைப்பாளருமான ட்ரூமனின் வெளியுறவுத்துறை செயலர் ஜோர்ஜ் மார்ஷல், “ஒரு சில வாக்குகளை வெல்வதற்கான வெளிப்படையான ஏமாற்று வித்தை” என்று கூறியதை ட்ரூமன் கண்டித்தார், இது ஜனாதிபதி அலுவலகத்தின் பெரும் கண்ணியத்தை கடுமையாக மழுங்கச் செய்யும் என்றார்”.
முன்னாள் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் டீன் அச்சனும் சியோனிசத்தை வன்மையாக எதிர்த்தார். அவர் “மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு அதிகவிலை கொடுக்க நேரிடும் என்று கவலைப்பட்டார்”.
வெளியுறவுத்துறையின் கிழக்கத்திய விவகாரங்களின் பிரிவின் தலைவர் கோர்டன் பி.மரியம், தார்மீக அடிப்படையில் பிரிவினை திட்டத்திற்கு எதிராக எச்சரித்தார். அந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக பலஸ்தீனப் பிரிவினையை அரபு மற்றும் யூதர்களின் ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே நியாயப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்தியல் ரீதியாக பிளவுபட்டிருந்த அமெரிக்காவும் அன்றைய சோவியத் யூனியனும் பலஸ்தீனத்தில் சியோனிச அரசை உருவாக்குவதில் ஒருபோராட்ட முனையில் ஒற்றுமையுடன் போராடும் தோழர்களைப் போல ஒன்றாக இணைந்து நின்றன. இது இரண்டு வல்லரசுகள் மீதும் மற்றும் உலகம் முழுவதும் யூதர்களுக்கு எந்த அளவுக்கு ஆற்றல் மிக்க கட்டுப்பாடு இருந்தது என்பதைக் காட்டுகிறது.
இப்பின்னணியில் தான் 1947நவம்பர் 29 அன்று, ஐ. நா. அதன் சொந்த சாசனத்தயே மீறும் வகையில் பலஸ்தீனத்தின் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தது. அன்று முன்மொழியப்பட்ட யூத அரசில் இருந்த 1,008,900 மொத்த மக்கள் தொகையில், அரபு-யூத விகிதம் 499,020க்கு509,780 என்ற ரீதியில் தான் இருந்தது.
பலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதற்கான ஐ.நா.தீர்மானத்தை நிராகரித்தனர், ஏனெனில் அது அவர்களின் சொந்த தாய்நாட்டை இரண்டாகக் கூறுபோடும் விடயமாக இருந்தது.
நியாயமான அனைத்து சிந்தனையாளர்களிடமிருந்தும் இந்த அநீதிக்கு எதிரான பரவலான கண்டனங்கள் எழுந்தன. அதன் விளைவு இன்றும் ஐ.நா.வில் மிகவும் கண்டிக்கப்பட்ட நாடாகவே இஸ்ரேல் உள்ளது.
அல்பர்ட் ஈன்ஸ்டன் “இராணுவ மயப்படுத்தப்பட்ட யூத கருதத்தியலை தழுவவில்லை. பலஸ்தீன அரபு மக்களின் குடியுரிமைகளை மீறும் வகையில், அவர்களது காணிகளை கொள்ளையிடும் வகையில் அல்லது அவர்களுக்கான சம உரிமையை மறுக்கும் வகையில் யூத நாடு அமையும் என்பதால் அவர் அதை ஏற்கவில்லை” என்று குறிப்பிடுகின்றார்.
“இந்த யூத நாட்டு கருத்தியல் எனது இதயத்தோடு ஒத்துப் போகவில்லை. ஏன்னுடைய இதயத்தின் படி அது ஏன் தேவைப்படுகின்றது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அது பல கஷ்டங்களோடும் குறுகிய மனப்பாங்கோடும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அது மோசமானது என்றும் நான் நம்புகின்றேன்று சுட்டிக்காட்டியுள்ளார் அல்பர்ட் ஈன்ஸ்டன்.