ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு தற்காலிக போர்நிறுத்தத்திற்காக மட்டும் திறக்க முடியாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் (Strait of Hormuz) தொடர்ந்து, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தின் மற்றொரு முக்கியப் பாதையான பாப் எல்-மண்டேப் ஜலசந்தியையும் (Bab el-Mandeb Strait) முடக்கப்போவதாக ஈரான் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் (Strait of Hormuz) தொடர்ந்து, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தின் மற்றொரு முக்கியப் பாதையான பாப் எல்-மண்டேப் ஜலசந்தியையும் (Bab el-Mandeb Strait) முடக்கப்போவதாக ஈரான் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் இந்தப் பாதை மூடப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் வர்த்தகம் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் எனப் பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும், எந்தவொரு அழுத்தங்களுக்கும் அல்லது காலக்கெடுவுக்கும் இணங்கப் போவதில்லை என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு தற்காலிக போர்நிறுத்தத்திற்காக மட்டும் திறக்க முடியாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. அமெரிக்கா ஒரு நிரந்தரமான போர்நிறுத்தத்திற்குத் தயாராக இல்லை என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ள ஈரான், தமது நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுத்து எந்தவொரு முடிவையும் எடுக்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எரிசக்தி நெருக்கடியால் வழங்கப்பட்டுவந்த புதன் கிழமை அரசாங்க வ்டுமுறை இரத்து, இந்த 8ஆம் திகதி முதல், கடந்த இரு வாரங்களாக நடைமுறையில் இருந்த அரசாங்க விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவிப்பு.


