சாவகச்சேரியில் கோர விபத்து குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி!
உந்துருளியும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரியில் கோர விபத்து குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி!
யாழ் சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட சாவகச்சேரி - நுணாவில் சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 பிரதான வீதியில், சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த உந்துருளியும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் உந்துருளியை செலுத்திச்சென்ற யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச்சேர்ந்த 44 வயதுடைய செல்வம் ரொபின் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரினால் பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனையின் பின்னர் நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


