Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அமெரிக்க பள்ளிவாசலில் பயங்கர துப்பாக்கிச் சூடு - அதிகாரி உட்பட மூவர் பலி!

.

அமெரிக்காவின் சென்டியாகோவில் அமைந்துள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (18) இரவு அந்நாட்டு நேரப்படி 11.53 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள், பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த சந்தேகநபர்கள் 17 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தற்கொலை செய்யப் போவதாகக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மிகவும் ஆபத்தான மற்றும் கவலைக்கிடமான சம்பவம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக தனது பலத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.