Breaking News
பிரிகேடியர் பால்ராஜ் வீரச்சாவு 20. 05. 2008.
.
“ஆனையிறவு படைத்தளத்தை எந்தக்கொம்பனாலும் வெற்றிகொள்ள முடியாது.. எங்களின் ஆலோசனைகளும், படைவளங்களும் உள்ளவரை கனவில்கூட ஆனையிறவு படைத்தளத்தை வெற்றிகொள்வது சாத்தியமில்லை” உலகின் பெரும் இராணுவ விற்பன்னர்களின் கருத்தாக இது இருந்தது. இந்த விற்பன்னர், இராணுவமேதைகள் அன்று மறந்த பெயர் பா ல் ரா ஜ்.. இன்னும் சிறிதுகாலம் பா ல் ரா ஜ் என்னும் மாவீரன் வாழ்ந்திருந்தால் முடிவுகள் சிலவேளை வேறுமாதிரி இருந்திருக்கலாம்..தமிழினம் கர்வம் கொள்ள, பெருமிதம் கொள்ள, செருக்குடன் நடைபயில பால்ராஜ் என்னும் இந்த மாவீரன் வென்று தந்த ஆனையிறவு ஒன்றே போதுமானது..