Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி: பரந்தளவான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்ப்பு

.

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டியது அவசியமென்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன, மத பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பணிமனைக்கு சென்றிருந்தோடு, ஊழியர்களையும், ஏனைய ஊடகவியலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது உதயன் பத்திரிகை பணிமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தலைமை ஆசிரியர் த. பிரபாகரன் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கினார்.

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க வேண்டும் என்பதே முதல் பிரச்சினையாக இருந்ததாகவும், கடந்த ஜூன் மாதத்தில் அந்த பிரச்சினையை நிறைவுக்கு கொண்டு வர முடிந்திருந்தமையால் தற்போது ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவது குறித்து சிந்தித்து வருவதாகவும் தெரிவித்தாார்.

கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் போது இளைஞர்கள் பெரும்பாலும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பிலான கோரிக்கைகளையே முன்வைத்தனர். அதனால் வடக்கிலும், தெற்கிலும் உள்ள இளையோரின் எதிர்பார்ப்புக்களில் வேறுபாடுகள் தெரியவில்லை என்றும் கூறினார்.

மாகாண சபைகளை வலுவூட்டி அந்தந்த மாகாணங்களின் அபிவிருத்திக்கான பரந்தளவான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதே தனது எதிர்பார்ப்பாகும் என தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து மாகாணங்களுக்கும் மத்திய அரசாங்கம் உதவிகளை வழங்குமெனவும் உறுதியளித்தார்.

Oruvan

Oruvan