Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இலங்கையில் வருடாந்தம் 19 ஆயிரம் பேர் புற்று நோயால் இறக்கும் அபாயம்

நாட்டின் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக புற்றுநோய்க்கான சிகிச்சை சேவைகள் உள்ளன.

இலங்கையில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையில் சமீபத்தில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக புற்றுநோய்க்கான சிகிச்சை சேவைகள் உள்ளன.

புற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதுடன், தேசிய மற்றும் சர்வதேச ஆதரவையும் பெற எதிர்பார்த்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கான ஆரம்பிக்கப்பட்ட சுகாதார கல்வித் திட்டங்களை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்படுகின்றனர்.

அவ்வாறு பதிவாகும் பெரும்பாலான புற்றுநோயாளர்கள் வாய் மற்றும் கழுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், மார்பகப் புற்றுநோய் பெண்களிடையே மரண வீதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.