Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானம்”

மக்களை மயக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்புகின்றதா அரசு!

“2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில்  120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்ட முடிந்தது”
இலங்கை  மதுவரித் திணைக்களம். 

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில்  120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கை மநதுவரித் திணைக்களத்தின் பணிகள் மற்றும் நோக்கில் மதுபானம் மற்றும் புகையிலைத் துறையை  முறையாக ஒழுங்குபடுத்தி வரிப் பணத்தை அரசாங்கத்திற்கு அளவிடுவதற்கும், அத்தொழிலில் சட்ட விரோதமான பணப் பாய்ச்சல் தொடர்பான சட்டத்தை பலப்படுத்துதல், அதனால் ஏற்படும் சமூக மற்றும் சுகாதாரப் பாதிப்புகளைத் தடுப்பதன் ஊடாக மக்களுக்குத் தெளிவு படுத்தி, சமூகப் பாதுகாப்பை உருவாக்குவதற்காக நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

அதன்படி 2022 ஆம் ஆண்டில் 170.3 பில்லியன், 2023 ஆம் ஆண்டில்  178.6 பில்லியன் ரூபாய்களும், 2024 ஆம் ஆண்டில்  226.7 பில்லியன் ரூபாய்களும் அரசாங்கத்திற்கு அறவிடுவதற்கு மதுவரித் திணைக்களம் செயற்பட்டுள்ளது.

 மேலும் 2025 ஜூன் 30 வரை  120.5 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன் அது நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இலக்கில் 102.6 % வீத வளர்ச்சியாகும்.

ஒவ்வொரு அரசாங்கமும மதுபானம் மற்றும் புகையிலை அடிப்படையில் வரி விதிப்பு இடம்பெற்றுள்ளமை,  அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மாத்திரமன்றி அதன் உற்பத்திகளை நுகர்வதை கட்டுப்படத்துதல் மற்றும் அவ்வுற்பத்திகளுக்குக் காணப்படும் கேள்வியை குறைப்பதனால் சமூக மற்றும் சௌபாக்கிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கம்  என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.