பலதும் பத்தும் : - 12,03, 2025 - பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம். யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப்போராட்டம்.
ஆசிரியருக்குவெளிநாட்டு பயணத் தடை.

பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குஉட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 12) காலை 08:00 மணி முதல் 24 மணிநேர நாடு தழுவிய அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும்மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முன்னெடுத்து வருகிறது.
யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப்போராட்டம்.
யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பெரும்பாலும்பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் சேவையினை பெறவந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி.
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில்கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
இன்று (12) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சிசபைகளுக்குமான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசாகஜேந்திரன் உள்ளிட்டவர்கள் செலுத்தியிருந்தனர்.
ஆசிரியருக்குவெளிநாட்டு பயணத் தடை.
மாணவர்களை மண்டியிட வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் வகுப்பின் ஆசிரியருக்குவெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளுக்காக சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபைக்கு வருகைதருமாறு சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு நேற்று (11) அழைப்புவிடுத்த போதிலும்இ அவர் வருகைத்தரவில்லை என தெரியவந்துள்ளது.
அதன்படிஇ இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர்இ சந்தேக நபருக்கு எதிராக வெளிநாட்டுபயணத் தடையைப் பெறுவதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக பலர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடு அளித்துள்ளதாகவும்இஅதன்படிஇ சந்தேக நபர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை மேலும்தெரிவித்துள்ளது.
பாடசாலைளுக்கானவிடுமுறை.
2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கானவிடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதற்கமையஇ முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம்திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்இ முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம்இ பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்காகஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்தொடங்கிய வேலைநிறுத்தம்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குஉள்ளாக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுஇ அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்தொடங்கிய வேலைநிறுத்தம்இ நாளை (13) காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுகத் சுகததாச இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வௌியிட்ட அவர் 'இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரைஅடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். குறித்த வேலைநிறுத்தம் நாளை காலை 8 மணிக்கு முடிவடையும். இது போன்ற விடயங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதியாக உள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பாக இதைவன்மையாகக் கண்டிக்கிறோம்.'
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம்.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் அவரது குடும்பஉறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்குஉத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷின் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து டாக்கா நீதிமன்றத்தின்சிரேஷ்ட நீதிபதி (ணுயமசை ர்ழளளயin) சாகிர் ஹுசைன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பங்களாதேஷில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து 77 வயதான ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 05 ஆம் திகதி இந்தியாவில் அரசியல் தஞ்சமடைந்தார்.